முகப்பு
மகளிர்மணி

தோல் சுருக்கம் போக்கும் திராட்சை!

முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றைப் பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

கறுப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றைப் பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும்.

திராட்சைப் பழச்சாறுக்கு சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சைச் சாறு சருமப் பிரச்னைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கிண்ணம் திராட்சைச் சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.

திராட்சைப் பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வறட்சியிலிருந்து காக்கிறது.

கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சைப் பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனைத் தொடந்து 10 நாட்கள் செய்து வந்தால் கருவளையம் நீங்கிவிடும்.

சிறிதளவு திராட்சை சாறுடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்து விடும்.

திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை அரைத்து கூழாக்கி முகம், கழுத்து பகுதிகளில் பூசி  உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.