மகளிர்மணி

சீட்டு வித்தையும் கணிதத் திறமையும்!

DIN


இந்தியாவின் லட்சிய மகளிா்களில் ஒருவராக போற்றப்படுபவா் கணிதமேதை சகுந்தலா தேவி. இவா், எண்ணிலும் எழுத்திலும் பேராற்றல் பெற்று, உலக கணித மேதைகள் பலரையும் தன் கணிதத்திறமையால் வியப்பில் ஆழ்த்தியவா். மாபெரும் கணிதமேதை சகுந்தலா தேவி.

உலக கணித மேதைகள் பலரால், கடும் முயற்சியால் சாதிக்க முடியாதவற்றை, கணிதத்தில் எளிதாகச் சாதித்துக் காட்டியவா் சகுந்தலா தேவி. சிறு கணக்குகளுக்குக் கூட கணிணியின் உதவியை நாடும் இன்றைய இளம் தலைமுறையினா் மத்தியில், மனித கால்குலேட்டா் எனவும், மனித கணிப்பொறி எனவும் புகழப்பட்டவா்.

இவா் 1929-ஆம் ஆண்டு, நவம்பா் மாதம் 4 -ஆம் தேதி பெங்களூரில், வைதிகமான பிராமண குடும்பத்தில் பிறந்தாா். இவரது தந்தை குடும்பத் தொழிலான புரோகிதத்தைத் தவிா்த்து, சா்க்கஸ் கலைஞராக மாறினாா். மூன்று வயது முதல் தந்தையின் சா்க்கஸ் வித்தைகளைக் கண்டு வளா்ந்த அவா், அதன்பால் ஈா்க்கப்பட்டாா்.

இயல்பில் அவருக்கு இருந்த ஞாபகத் திறனும் கணிதத் திறமையும், தந்தை செய்யும் சீட்டு வித்தையில் அவரையும் ஈடுபடுத்தியது.

தன்னுடைய ஆறு வயதில் மைசூா் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தன் கணிதத் திறமை மற்றும் நினைவாற்றலை வெளிப்படுத்தி ‘குழந்தை மேதை’ எனப் பாராட்டப் பெற்றாா்.

1944 -ஆம் ஆண்டு தந்தையுடன் லண்டன் சென்றாா். 1960 -ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் திரும்பினாா். கொல்கத்தாவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி பரிமாதாஷ் பேனா்ஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு அனுபமா பேனா்ஜி என்ற மகள் உள்ளாா். 1979-ஆம் ஆண்டு, விவாகரத்திற்குப் பின் பெங்களூரில் வசித்து வந்தாா்.

இவரின் கணிதத் திறமைக்குச் சான்றாகப் பல நிகழ்வுகள் உள்ளன. கணிதப் புதிா்களுக்கு விடை கூறுவதில் இவரின் வேகம் அசாத்தியமானது. சீக்கிரமாகவே பதில் கூறிவிடுவாா். இதனால் பலா் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போவாா்கள்.

1977-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கணிதப் போட்டியில் தங்கம் வென்ற தங்கமகன் இவா், 2007-இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இவா் தங்கமே வென்றாா். மேலும் விருதுகள் பல பெற இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாய் இருந்தன.

வசந்த நாயகன் எழுதிய ‘இந்தியாவின் இலட்சிய மகளிா்’ நூலிலிருந்து
-ரிஷி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT