மகளிர்மணி

முருங்கைக்கே முதலிடம்!

நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் கரோனா வைரஸ் என்ன அதை மீறிய வைரஸூம்  நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

மு. சுகாரா

நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் கரோனா வைரஸ் என்ன அதை மீறிய வைரஸூம்  நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நம்  உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் உணவுகளில்  முக்கிய இடம் பெற்றிருப்பது முருங்கை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக் கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே  வராது.

நாம் உண்ணும்  உணவில், முருங்கை கீரை அல்லது முருங்கைக்காய் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சேர்த்துக் கொண்டால்  நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

முருங்கையில் வைட்டமின் ஈ ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7மடங்கு அதிகமாக உள்ளது.
 வைட்டமின் அ கேரட் இல் உள்ளதை விட 4மடங்கு அதிகமாக உள்ளது.
 வைட்டமின் ஆ2 வாழைப்பழத்தில் உள்ளதை விட 50மடங்கு அதிகமாக உள்ளது.
வைட்டமின் ஆ3 வேர்க்கடலையில்  உள்ளதை விட 50மடங்கு அதிகமாக உள்ளது.
 கால்சியம் சத்து  பாலில் உள்ளதை விட 4மடங்கு அதிகமாக உள்ளது.
புரோடீன்(புரதச் சத்து பாலில் உள்ளதை விட 2மடங்கு அதிகமாக உள்ளது.
மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.
இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25மடங்கு அதிகமாக உள்ளது.
பொட்டாசியம் சத்து  வாழைப்பழத்தில் உள்ளதை விட 3மடங்கு அதிகமாக உள்ளது.
இவ்வளவு சத்துகளையும் வைட்டமின்களையும்  உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டு கொள்வதே இல்லை. 
 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத  எட்டு வகை  அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில்  மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும்  கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

ஒரே பெயரில் 2 கடவுச்சீட்டு; ஒருவா் கைது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவலா் பலி

ஆற்றில் மூழ்கி சகோதரா் இருவா் உயிரிழப்பு

அன்புக் கரங்கள் திட்டத்தில் 98 குழந்தைகளக்கு நிதி

SCROLL FOR NEXT