முகப்பு
மகளிர்மணி

சமையல் சமையல்!

முருங்கை இலையை நீரில் அலசி, துணியால் நன்கு சுற்றி ஈரத்தைப் போக்கவும். வெறும் வாணலியில் இந்த இலையை வறுத்துக் கொண்டு, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

முருங்கை இலை பொடி சாதம்

தேவையானவை:
வடித்த சாதம் - 1 கிண்ணம்
ஆய்ந்த முருங்கை இலை - அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 6 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
உளுந்தம் பருப்பு - கால் கிண்ணம்
எள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய், நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: முருங்கை இலையை நீரில் அலசி, துணியால் நன்கு சுற்றி ஈரத்தைப் போக்கவும். வெறும் வாணலியில் இந்த இலையை வறுத்துக் கொண்டு, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பூண்டு, உளுந்தம் பருப்பு, எள், காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெய்யில் வறுத்து. புளி, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். சூடான வடித்த சாதத்தில் சிறிதளவு நெய்விட்டு, செய்து வைத்திருக்கும் பொடி வகை களைப் போட்டு பிசைந்து சாப்பிடவும்.


ராகி சேமியா பிரிஞ்சி

தேவையானவை:
ராகி சேமியா - 1 கிண்ணம்
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா 2
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய கொத்துமல்லித்தழை,
புதினாத்தழை - தலா ஒரு கைப்படி
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பிரியாணி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பல்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஏலக்காய் - 2
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப்பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் நீர்விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிரி உதிரியாக வேகும்) இப்போது ராகி சேமியாவைப் போட்டுக் கிளறி வெந்ததும் கொத்துமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.


கம்பு - ஜவ்வரிசி இட்லி

தேவையானவை:
கம்பு - 1 கிண்ணம்
இட்லி அரிசி - 3 கிண்ணம்
ஜவ்வரிசி - அரை கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு - 1தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
பச்சைமிளகாய் - 3 பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை: கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3-4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


தானிய இனிப்பு புட்டு

தேவையானவை:
பச்சரிசி மாவு - அரை கிண்ணம்
கடலைப் பருப்பு, பச்சைப்பயறு,
சோளம் - தலா கால் கிண்ணம்
கோதுமைமாவு - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை - 1 கிண்ணம்
முந்திரி - 8 ( நெய்யில் வறுக்கவும்)
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
நெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: வாணலியில் கோதுமை மாவை சிவக்க வறுத்து வைக்கவும். தானிய வகைகளை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் தனித்தனியாக பொடித்துக் கொள்ளவும். இவற்றுடன் அரிசி மாவு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தெளித்துப் பிசறி 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்தமாவுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →