மகளிர்மணி

இளம் துள்ளல் வேறு.. நிஜம் வேறு

ராஜிராதா

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கல், "எங்களுக்கு ராஜ பதவிகள் வேண்டாம். நாங்கள் ஒதுங்கி சுயமாய் வாழவிரும்புகிறோம்' எனக் கூறி தற்போது விலகி வாழ்ந்து வருகின்றனர். இதில் ராணிக்கு இஷ்டமில்லை. இருந்தாலும் அனுமதித்தார்.

ராணியின் குடும்பத்தில் இப்படி நடப்பது முதல் தடவையில்லை.

ராணியின் மகள், இளவரசி ஆனி இதுபற்றி அறிந்ததும் ""இன்னும் புரிஞ்சுக்கலே அந்த ஜோடி'' என்றார் ஏன்?

அதற்கு தன்னையே உதாரணமாய் கூறினார்:

""முதியவர்களிடமிருந்து பாடம் படிக்கணும். நீயா புதுசா செய்யணும்னு செய்யாதே.. சிலதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சுக்கும்போது, பழைய வாழ்க்கைக்கே போயிடலாம்னு தோணும். நான் முயலாததா ஆனால் ஒரு கட்டத்தில் புரிஞ்சுகிட்டேன். இயங்கும் சக்கரத்தோடு, நாமும் சேர்ந்து சுத்தறது தான் நல்லது என உணர்ந்தேன். மீண்டும் இணைத்துக் கொண்டேன்.

இதனை இளம் வயதினர் புரிந்து கொண்டு.. தங்களையும் மாற்றிக் கொண்டு அரச குடும்பத்தினருடன் இணைந்து தொடர்ந்து வாழணும்'' என்றார் ஆனி.

இளவரசி ஆனி ஆண்டு முழுவதும் பிசி. குறைந்தது 500 நிகழ்ச்சிகளிலாவது பங்கு கொண்டு மிடுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டு, அதேசமயம் ராஜ குடும்பத்தில் தொடருபவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT