சின்னத்திரை மின்னல்கள்!
சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கி நிஜ வாழ்க்கையில் இணைந்தவர்களின் பட்டியல் சேத்தன் - தேவதர்ஷினியில் தொடங்கி நீண்டு கொண்டே போகிறது அந்த வகையில், தற்போது இணையவுள்ள ஜோடி "சத்யா' தொடரில் நாயகன்-
நிஜத்தில் இணையவுள்ள ஜோடி!
சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கி நிஜ வாழ்க்கையில் இணைந்தவர்களின் பட்டியல் சேத்தன் - தேவதர்ஷினியில் தொடங்கி நீண்டு கொண்டே போகிறது அந்த வகையில், தற்போது இணையவுள்ள ஜோடி "சத்யா' தொடரில் நாயகன்- நாயகியாக நடித்து வரும் ஆயிஷா-விஷ்ணு ஜோடி. சமீபகாலமாகவே இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. இதனால் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைய உள்ளனர் என்று தெரிவித்து வந்தனர். ஆனால், இதனை மறுத்துவந்த ஆயிஷா - விஷ்ணு தற்போது பகிரங்கமாகவே தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். இதனால் விரைவில் இவர்களது திருமண செய்தி வெளிவரவுள்ளதாக சின்னத்திரை வட்டாரம் தெரிவிக்கிறது.
பிக் பாஸ்-4 பெண் போட்டியாளர்கள்!
கரோனா பரபரப்பு எல்லாம் ஓரளவு ஓய்ந்து, சின்னத்திரை இயங்க தொடங்கியுள்ள நிலையில், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்- 4-க்கான ப்ரோமோ சில நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோ அக்டோபர் முதல் தொடங்கவிருப்பதாக தெரிய வருகிறது. பிக் பாஸ் - 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் -4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பெண் போட்டியாளர்களாக ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, அர்ச்சனா சந்தோகி, கேப்ரியெல்லா சார்ல்டன், சஞ்சனா சிங், ஷாலு ஷமு, வசுந்த்ரா தாஸ் இவர்களின் பெயர்கள் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மகிழ்ச்சியில் நாயகியின் நாயகி!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "நாயகி' தொடர் கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு ஏற்கெனவே இருந்த நாயகன் நாயகி மாற்றப்பட்டு புதிய களத்தில் அறிமுகமானது, இந்த புதிய கதையமைப்பில் தொடரின் நாயகியாக நட்சத்திரா களமிறங்கினார். இதுகுறித்து நட்சத்திரா கூறுகையில், ""ஏற்கெனவே இருந்த நாயகன்- நாயகிக்கு மாற்றாக தொடர்வதால், எனது கேரக்டருக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என்று பயந்தேன். ஆனால், ஒரு சில எபிúஸôடுகளிலேயே தொடர் விறுவிறுப்புடன் ரசிகர்களை ஈர்க்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அம்பிகா மேடம் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் நெருக்கமாகப் பழகக் கூடிய வாய்ப்பை வழங்கியிருக்கிறது நாயகி'' என்கிறார்.