முகப்பு
மகளிர்மணி

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்

மைக்ரோவேவ் அவனை  "ப்ரி-ஹீட்'  செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

Updated On : 9 ஆகஸ்ட், 2021 at 4:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:19 AM

தேவையானவை: 

பிரெட் ஸ்லைஸ் - 4
வெண்ணெய் - 50 கிராம்
வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது)
சீஸ் (அ) பனீர் - 50 கிராம்
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர்
சர்க்கரை - சிறிதளவு
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை: 

Advertisement

மைக்ரோவேவ் அவனை  "ப்ரி-ஹீட்'  செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும். வாணலியில் வெண்ணெய்யைச் சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு: "மைக்ரோ அவன்' இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.