முகப்பு
மகளிர்மணி

பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வேண்டுமா?

உணவுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுக்கும்போது பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உப்பை தெளித்து விட்டால் உணவுப் பண்டங்கள் பாத்திரத்தோடு ஒட்டாது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

உணவுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுக்கும்போது பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உப்பை தெளித்து விட்டால் உணவுப் பண்டங்கள் பாத்திரத்தோடு ஒட்டாது.

தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.

பித்தளை, செம்புப் பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டுக் கரைத்த கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாகத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.

வாணலியில் கறைபோக சமையல் உப்பைப் போட்டு சூடுபடுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →