மகளிர்மணி

சைக்கிள்பயிற்சியில் இளம்பெண்கள்!

ரிஷி

பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிப்பதற்காகவே பிரத்யேகப் பயிற்சி பள்ளி ஒன்று பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் சைக்கிள் ஓட்ட பயில வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறதாம்.

இதற்கு காரணம், இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை ஏறிக் கொண்டே வருவதால், இளம் பெண்கள் பலரும் தங்களுடைய இருசக்கர வாகனங்களை மூலையில் வைத்துவிட்டு சைக்கிளை பயன்படுத்துவதை விரும்புகின்றனர். இதனால் பணம் மிச்சமாவது மட்டுமின்றி உடற்பயிற்சி செய்தது போலாகும் என்றும் கருதுகிறார்களாம்.

""பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சைக்கிள் ஓட்ட இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக நகர்ப்புற பெண்கள் அதிகம் சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கு வருகிறார்கள்.

இவர்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுப்பதோடு, சைக்கிளை எப்படி கையாளுவது என்பது குறித்த பயிற்சிகளையும் ஓர்க் ஷாப் மூலம் கற்றுக் கொடுக்கிறோம்'' என்கிறார் இந்த பயிற்சி பள்ளியின் மூத்த சைக்கிளிஸ்ட்டான நிமிஷா அகர்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT