முகப்பு
மகளிர்மணி

25 நாள் உண்ணாமல் இருந்தவர்!

1947-ஆம் ஆண்டு  பிப்ரவரி, நாடு  பிரிவினை என்ற கடும் சோதனைக்குள்ளானது. இந்து- முஸ்லிம்  கலவரம் தலைவிரித்தாடிய  நவகாளிக்குக் காந்திஜி  பாதயாத்திரை மேற்கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:


1947-ஆம் ஆண்டு  பிப்ரவரி, நாடு  பிரிவினை என்ற கடும் சோதனைக்குள்ளானது. இந்து- முஸ்லிம்  கலவரம் தலைவிரித்தாடிய  நவகாளிக்குக் காந்திஜி  பாதயாத்திரை மேற்கொண்டார்.

அப்போது  ஒரு கிராமத்தில்  அவரை ஒரு  வீட்டிற்கு  அழைத்துச் சென்றனர். அங்கே காந்திஜிக்கு ஒரு  எதிர்பாராத  காட்சி காத்திருந்தது. அது,  அந்த வீட்டிலிருந்த பெண்  இந்து - முஸ்லீம்  ஒற்றுமைக்காக 25 நாள்களாகத் தொடர்ந்து உண்ணவிரதம்  இருந்தார். 

தம் பணியை அப்பெண்மணி செய்து வருவதைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்  காந்திஜி.  அந்த பெண்ணின்  அரிய செயலைப்  பாராட்டியதுடன், அவரது உண்ணா நோன்பையும்  கைவிடச் செய்தார் காந்திஜி.

தநல்லிணக்கத்துக்காகத் தம் உயிரையும்  தியாகம்  செய்யத் துணிந்த அந்த இஸ்லாமிய  பெண்தான்  அம்துஸ்சலாம்.

(கிளமெண்ட் ஈசுவர் எழுதிய "முதன்மைப் பெண்டிர்' என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.