முருங்கைப்பூ பொரியல்
வாணலியில் காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
தேவையானவை:
முருங்கைப்பூ - 1 கிண்ணம்
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
வேர்க்கடலை - 50 கிராம்
காய்ந்த மீளகாய் - 4
கடுகு, உளுந்தம்பருப்பு -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய்யைவிட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து அதில் பூண்டு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பூண்டு, வெங்காயம் பாதி வதங்கியவுடன் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து நன்கு புரட்டவும். கலவை நன்கு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலைப் பொடியைத் தூவி கிளறி இறக்கவும். சுவையான முருங்கைப் பூ பொரியல் தயார்.