முகப்பு
மகளிர்மணி

வாய்ப்புண் குணமாக...

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

மகளிர்மணி

வாய்ப்புண் குணமாக...

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

வால்மிளகின் தூளை வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சு சளி சீக்கிரம் குணமாகும்.

பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

வாழைத்தண்டுச் சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வர சதை போடுவதைத் தடுக்கலாம்.

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.

வசம்பை சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

கற்கண்டை வெண்ணெய்யுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

முழு கட்டுரையைப் படிக்க →