இளம் வடிவமைப்பாளர்!
அன்விதா விஜய் 13 வயதே ஆன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளராக ஆகியுள்ளார்.
அன்விதா விஜய் 13 வயதே ஆன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளராக ஆகியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர் கருத்தரங்கான "டபிள்யூ, டபிள்யூ டி.சி. 2020' சமீபத்தில், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில், 18 வயது நிரம்பிய 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் வித்தியாசமான நிகழ்வு என்னவென்றால், ஐ - போன் மற்றும் ஐ-பேடிற்கான செயலி வடிவமைப்பிற்காக சிறுவயதான அன்விதா விஜய் கலந்து கொண்டு சபையை வியப்பில் ஆழ்த்தியதுதான்.
அன்விதா, செயலி வடிவமைப்பாளராவதற்காக தனியாக எந்த ஒரு கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ செல்லவில்லை. யூடியூப் மற்றும் இன்டெர்நெட்டிலேயே இதனை கற்றறிந்துள்ளார்.
இதுபற்றி அன்விதா கூறுகையில், ""ஒரு சிறு பொறி மனதில் தட்டியதால் இது போன்று செயலி வடிவமைப்பில் எனக்கு ஆர்வம் வந்தது. எவ்வாறு புரோகிராமிங் செய்வது என்பதை முற்றிலும் இன்டர்நெட்டிலேயே கற்றுக் கொண்டேன்'' என்றார்.
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் நிறைய செயலிகளை அன்விதா வடிவமைத்துள்ளார்.