முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பூர்ணிதா.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பூர்ணிதா. இவர், "ஜெயம்' படத்தில் சதாவின் தங்கையாக கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்த பின்னர், திரைத்துறையில் "பேபி' கல்யாணியாக அறிமுகமானார். அதன்பின், பெரியத்திரை மற்றும் சின்னத்திரை நடிகையானார். கல்யாணி,

தொகுப்பாளினியாகவும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு, கடந்த 4 ஆண்டுகளாக திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போதுஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ரியாலிட்டி ஷோவான "ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் - 4' நிகழ்ச்சியில் குழந்தைகளின் வழிகாட்டியாக களமிறங்குகிறார். இதன்காரணமாக, சக நடிகர்களும், அவரது ரசிகர்களு ம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.