மகளிர்மணி

உருளைக்கிழங்கு   குலோப்ஜாமுன்

வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் துருவிய பனீர், பால் பவுடர், மைதா, ஏலக்காய்ப் பொடி எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதற்குள் ஒன்று அல்லது இரண்டு கல்கண்டு வைத்து

எஸ்.பிரியம்வதா சென்னை.



தேவையானவை:

உருளைக்கிழங்கு - 3
பனீர் - அரை கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி
மைதாமாவு - ஒன்றரை தேக்கரண்டி
சர்க்கரை - ஒன்றரை கிண்ணம்
எண்ணெய் - பொரிக்க
டைமண்ட் கல்கண்டு - 2 தேக்கரண்டி
பால்பவுடர் - அரை கிண்ணம்


செய்முறை:

வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் துருவிய பனீர், பால் பவுடர், மைதா, ஏலக்காய்ப் பொடி எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதற்குள் ஒன்று அல்லது இரண்டு கல்கண்டு வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் தண்ணீர்விட்டு ஒரு கம்பிப் பாகு பதம் சிரப் செய்து ஏலக்காய்ப் பொடி போட்டு வைக்கவும். அதில் பொரித்த குலோப்ஜாமூன் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து எடுத்து பரிமாறவும். உருளைக்கிழங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஒன்று. இந்த குலாப் ஜாமுன் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT