முகப்பு
மகளிர்மணி

பட்டன் காளான் பக்கோடா

பட்டன் காளான் பக்கோடா செய்வது எப்படி?

Updated On : 11 பிப்ரவரி, 2021 at 5:41 PM
பட்டன் காளான் பக்கோடா
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:59 AM

பட்டன் காளான் பக்கோடா

தேவையானவை:

பட்டன் காளான் - கால் கிலோ
கடலை மாவு - முக்கால் கிண்ணம்
அரிசி மாவு (அ) கார்ன் ஃபிளார் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

Advertisement

காளானை நன்கு அலசி உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் வேக வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பின்னர், மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களை ( எண்ணெய்யை தவிர) தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய வைத்து, அதில் சிறிய உருண்டைகளாக கிள்ளி காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான பட்டன் காளான் பக்கோடா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.