முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான "பிக்பாஸ் சீசன் -4' சமீபத்தில் முடிவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:

சீரியல் நாயகியாகும் பிக்பாஸ் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான "பிக்பாஸ் சீசன் -4' சமீபத்தில் முடிவடைந்தது. பொதுவாக ஒவ்வொரு சீசன் முடிவடையும்போதும், அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலருக்கு, விஜய் டிவி தொடர், ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் வாய்ப்பளிப்பது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் -4 முடிவடைந்துள்ள நிலையில், அதில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுவரை பங்கேற்ற ஷிவானிக்கு விஜய் டிவி நல்லதொரு வாய்ப்பு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்டிவியில் புதியதாக தொடங்கவுள்ள ஒரு தொடரில் நாயகியாகவுள்ளார் ஷிவானி.

இதில் அவருக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம்' தொடரில் நடித்த அஸீம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், மற்றொரு புறம் பிக்பாஸ் வீட்டில் பாலா-ஷிவானி காம்பினேஷன் பெரிதாக பேசப்பட்டதால், புதிய தொடரில் பாலா-ஷிவானி சேர்ந்து நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறது சின்னத்திரை வட்டாரம்.

அதேசமயம், விஜய் டிவியில் ஷிவானி கடைசியாக நடித்தது "கடைக்குட்டி சிங்கம்' என்ற தொடர். இத் தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் பாதியிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறி ஜீ தமிழ் சேனலுக்குப் போனார் ஷிவானி என்பதும் குறிப்பிடதக்கது.

காதல் திருமணம் செய்த நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ரசிகர்களின் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற தொடர் "செம்பருத்தி'. இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகையர் சிலர் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி நீக்கபட்டு இருந்தார். அதுபோன்று இத்தொடரில் ஆதியை ஒருதலைப் பட்சமாக காதலிக்கும் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபரும் சில வாரங்களாக தொடரில் இருந்து காணாமல் போயிருந்தார். இந்நிலையில் ஜெனிபருக்கு கடந்த 25-ஆம் தேதி சென்னையில் ஒரு கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. கார் ஓட்டுநர் ஒருவரை ஜெனிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது "செம்பருத்தி' தொடரில் மீண்டும் ஜெனிபர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.