முகப்பு
மகளிர்மணி

எண்ணெய் வழியும் சருமத்திற்கு சில டிப்ஸ் ..

முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள், இந்த சின்ன சின்ன ஆலோசனைகளை பயன்படுத்தி பயன்பெறலாம்:

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள், இந்த சின்ன சின்ன ஆலோசனைகளை பயன்படுத்தி பயன்பெறலாம்:

*தக்காளிப் பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டுவிடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஒட்ஸை சேர்த்து பூசி வரலாம்.  முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கிவிடும்.

*முகத்தில் மோரைப் பூசி சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை குறையும்.

*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்குப் பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

*வெள்ளரிக் காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெய் கட்டுப்படும். 

*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் கடலை மாவைப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவ வேண்டும். 

*வெள்ளரிச் சாறு, எலுமிச்சைச் சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்குப் பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.