ஆலோசனை குழுவில் அமெரிக்க பெண்மணி!
தமிழ்நாட்டில் பொருளாதார சூழலை மேம்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், அரசு பொருளாதார வல்லுநர்கள் ஐவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பொருளாதார சூழலை மேம்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், அரசு பொருளாதார வல்லுநர்கள் ஐவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இக்குழுவின் ஐவரில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார் பிரெஞ்சு - அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ. இவர், 2019-இல் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியுடன் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கியவர். தற்போது இவரைத்தான் தமிழக அரசு, பொருளாதார ரீதியாக ஆலோசனை வழங்கும் குழுவில் களம் இறக்கியுள்ளது.