மகளிர்மணி

பனீர் தயாரிக்க கவனிக்க வேண்டியவை!

தினமணி


வீட்டில் பனீர் தயாரிக்கும்போது கடையில் வாங்கும் பனீர் போல சரியாகத் துண்டு போடவராது. பனீரை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் மிருதுவாகிவிடும். அதை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகச் சுற்றி ஃப்ரீஸரில் சில மணி நேரங்கள் வைத்துவிட்டு பிறகு வெளியே எடுத்து துண்டுகள் போட்டால் நன்றாக வரும். 

 எலுமிச்சை சாதம் செய்யும்போது சிறிதளவு இஞ்சியைத் துருவி, பச்சை மிளகாயுடன் வாணலியில் வதக்கிப் போட்டால் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

 கறிவேப்பிலை சாதம் செய்யும்போது சிறிதளவு கொத்தமல்லித் தழையையும் சேர்த்து அரைத்தால் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் பொடிமாஸ் செய்து இறக்கும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.

 வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளுப் பொடியை போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி  நல்லெண்ணெய் விட்டாலும் குழம்பு மணமாக இருக்கும்.

 பச்சை நார்த்தங்காயில் ஊறுகாய் போடும்போது, அதனுடன் இஞ்சித் துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வைக்கலாம். நார்த்தங்காய் ஊறுவதற்குள் தொட்டுக்கொள்ள இஞ்சி, மிளகாய் உதவுவதோடு மூன்றும் கலக்கும்போது வித்தியாசமான ருசியில் இருக்கும்.

 தேங்காய் சாதம் செய்வதற்கு சற்று முற்றிய தேங்காய் ஏற்றது. எண்ணெய் சிறிதளவு சேர்த்து, தேங்காய்த் துருவலை வறுத்தால் போதும்.

 உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, பெரிய வெங்காயத்தை மெல்லிய நீளத்துண்டுகளாக நறுக்கி நெய்யில் நன்கு சிவக்க வறுத்துத் தூவினால் சுவை கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT