முகப்பு
மகளிர்மணி

மாங்காய் தொக்கு 

மாங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.

Updated On : 22 ஜூலை, 2021 at 5:45 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM


தேவையானவை:

மாங்காய் - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தனியா , வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

Advertisement

மாங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய்
ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும். தனியா, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றைச் சிறிதளவு எண்ணெய்யில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைத் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நறுக்கி வைத்திருக்கும் மாங்காயைச் சேர்த்து சிறு தீயில் வைத்து மூடிவிடவும். பாதி வெந்த பிறகு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி ஆகியவற்றையும் சேர்த்து வேகவிடவும். இறக்குவதற்கு முன் பொடியைத் தூவிச் சிறிது நேரம் வதக்கிய பின் இறக்கிவிடவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி மேலே தூவவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.