மகளிர்மணி

குப்பைமேனியின் மருத்துவ குணங்கள்!

ஆர்.கே. லிங்கேசன்


குப்பைமேனி, கீரை வகையைச் சார்ந்தது. இதை மூலிகையாகவும் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்களும் உள்ளன. இதனை பூனைவணங்கி என்றும் சொல்வது உண்டு.

குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து அதனை சருமத்தின் மீது தடவி ஒரு மணி நேரம் சென்றதும், கழுவி வந்தால் தோளில் ஏற்படும் நோய்கள் குணமாகும். இதனை தொடர்ந்து 15 நாள்கள் செய்து வரவேண்டும்.

அதுபோன்று குப்பைமேனி இலையுடன் உப்பு வைத்து கசக்கினால் கிடைக்கும் சாற்றை தொண்டை மீது போட்டால் தொண்டை வலி குணமாகும்.

குப்பைமேனி இலையை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடியாக்கி, தினமும் இரு தடவைகள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்னைகள் குணமாகும்.

குப்பைமேனி வேரை தண்ணீரில் நன்கு அலசி பிறகு அதை கொஞ்சம் நல்ல தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வர வயிற்றிலிருக்கும் புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி ஒரு சிறந்த கிருமி நாசினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT