முகப்பு
மகளிர்மணி

போர் விமானத்தை இயக்கும் இளம் பைலட்!

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் முதல் போர் விமான பைலட் என்ற பெருமையை 24 வயது மாவ்யா சுதன்  பெற்றுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் முதல் போர் விமான பைலட் என்ற பெருமையை 24 வயது மாவ்யா சுதன் பெற்றுள்ளார். லம்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாவ்யா, ரஜவுரி மாவட்டத்திலிருந்து விமானப்படையில் சேரும் 12 - ஆவது பெண் ஆவார். இந்திய போர் விமானத்தின் பைலட்டாக நியமிக்கப்பட்டதில் ரஜவுரி மாவட்டத்திலேயே முதல் பெண் இவர்தான். ஐதராபாத்தில் துண்டிகல் விமானப்படை அகாதெமியில் பயிற்சியை நிறைவு செய்தார். மாவ்யாவின் தந்தை வினோத் சுதன் தன் மகள் போர் விமானத்தின் பைலட் ஆனது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மேலும், ""என் மகளை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இன்றைக்கு மாவ்யா என் மகள் மட்டுமல்ல இந்த நாட்டுக்கே மகள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.