மகளிர்மணி

"முதலில் உயிர் பாதுகாப்பு'

டோக்கியோ 2021  ஒலிம்பிக்ஸில் இறகு   பந்தாட்டப் போட்டியில்  கலந்து கொள்ள இந்தியாவில்  தகுதி  பெற்றிருக்கும்  ஒரே வீராங்கனை  பி. வி. சிந்து தான்.

கண்ணம்மா பாரதி


டோக்கியோ 2021 ஒலிம்பிக்ஸில் இறகு பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவில் தகுதி பெற்றிருக்கும் ஒரே வீராங்கனை பி. வி. சிந்து தான். தரவரிசைப் பட்டியலில் சர்வதேச அளவில் ஏழாவது இடம் சிந்துவிற்கு.
"கரோனா அனைத்து மக்களின் வாழ்வியலை பாதித்திருப்பதை போலவே விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை மன ரீதியாகவும் பாதித்திருக்கிறது. வாழ்க்கை திரிசங்கு நிலையில் இருக்கும் கரோனா காலகட்டத்தில் உயிர் வாழ்வது மிக மிக முக்கியமாக மாறியுள்ளது'- என்று சொல்லும் சிந்து, மன அமைதி பெற தனது ஓய்வு நேரத்தை தியானம் செய்வதிலும் ஓவியங்கள் வரைவதிலும் செலவழிக்கிறார்.
2016 - யிலிருந்து இறகுப் பந்து போட்டியில் சிந்துவின் எதிராளியாக இருந்துவரும் கரோலினா மரின் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால் 2021 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கரோனா மூன்றாம் அலை ஜப்பானில் பரவி மருத்துவ அவசரநிலை பிரகடனப்பட்டு இருப்பதையும் மீறி ஒலிம்பிக்ஸ் நடந்தால் சிந்துவிற்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற நிலை. இது குறித்து சிந்து விளக்குகிறார்:
""தோழி மரின் போட்டிகளில் கலந்து கொள்ளாதது வருத்தப்பட வேண்டிய விஷயம். போட்டி அரங்கில் நாங்கள் எதிரிகள் என்றாலும், வெளியே எங்களுக்கிடையில் ஆரோக்கியமான நட்பு உள்ளது. மரின் கலந்து கொள்ளாததால், போட்டிகள் எளிதாக அமையும் என்று சொல்ல முடியாது. மரின் போல திறமையான முதல் பத்து வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்வார்கள். அதனால் கடும் போட்டி நிச்சயமாக இருக்கும். அதில் சந்தேகம் வேண்டாம்.
ஒன்றரை ஆண்டுகாலமாக போட்டிகள் பெரிதாக நடக்கவில்லை. பயிற்சி முகாம்களும் மூடிக் கிடந்தன. ஒரே ஆசுவாசம், ரொம்ப காலத்திற்குப் பிறகு இந்த நீண்ட கட்டாய ஓய்வுக் காலத்தை பெற்றோருடன் கழிக்க முடிந்திருக்கிறது.
கரோனா காலத்தில் எந்த விளையாட்டு வீரர்களாலும் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. வீட்டுக்குள் இருக்க வேண்டிய தாகப் போய்விட்டது. முதலில் உயிர் பாதுகாப்பு... அப்புறம் தான் விளையாட்டு... பயிற்சியெல்லாம். இருந்தபோதிலும் அனுமதி கிடைக்கும்போது எனது புதிய பயிற்சியாளர் பார்க் ஹைதராபாத்தில் இருக்கும் கச்சிபெளலி அரங்கில் பயிற்று வித்தார்.
"ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள இங்கிருந்து புறப்படுகிற போதும், டோக்கியோவில் சென்ற உடனும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டோக்கியோவில் தங்கியிருக்கும், ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம். இதுதான் ஒலிம்பிக்ஸின் விதிகள். டோக்கியோவில் தங்கும் நாள்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிக ஆட்களுடன் சேர்ந்து நின்று பேசக் கூடாது. அடிக்கடி கைகளை சானிடைஸர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
கரோனா காலத்தில் பயிற்சியின் போதும் சரி.. போட்டிகளின் போதும் சரி.. பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. பார்வையாளர்கள் இல்லாமல்தான் ஆட வேண்டும். பார்வையாளர்கள் தொலைகாட்சியில் எங்கள் ஆட்டத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தை கரோனா திணித்துவிட்டது.
"பந்தை அதிரடியாகப் பாய்ந்து அடிப்பது எனது பிளஸ் பாயிண்ட். அப்படி செய்ய எனது உயரம் உதவுகிறது. நான் இப்படி விளையாடுவேன் என்று எனக்கு எதிராக ஆடுபவருக்குத் தெரியும். அவரும் எனது தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் நடத்துவார். அந்த தாக்குதலைக் கணித்து, பாதுகாப்பாகத் தடுத்து நானும் எச்சரிக்கையாக விளையாட வேண்டிவரும்' என்கிறார் பி. வி. சிந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT