மகளிர்மணி

பொட்டுக்கடலை குருமா 

சுந்தரி காந்தி

தேவையானவை: 

தக்காளி-     2
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
கசகசா   - கால் தேக்கரண்டி
வெங்காயம்  -  1
கிராம்பு     -   2
ஏலக்காய் -   1
பட்டை       -    1
பச்சை மிளாகாய் -3
மஞ்சள் தூள்  -  கால் தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது  அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு -  தேவைக்கேற்ப

செய்முறை: 

மிக்ஸியில் பொட்டுக்கடலை, கசகசா, தேங்காய்த் துருவல் சேர்த்து மையாக அரைத்து தனியே வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, ஏலக்காய் , கிராம்பு,இஞ்சி-பூண்டு விழுது,  சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், பொடியாக நறுக்கிய  தக்காளி , வெங்காயம் சேர்த்து  நன்றாக வதக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், கசகசா அரைத்த  விழுது, மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கவும். பின், தண்ணீர் விட்டு அடுப்பை "சிம்'மில் வைத்து,  உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய்ப் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.  கூடுதல் சுவைக்கு முந்திரி சேர்க்கலாம். கசகசா இல்லாமலும் செய்யலாம். தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய உருளை, காரட் சேர்க்கலாம். சப்பாத்தி, பூரி, புரோட்டா, இட்லி, தோசை, இடியாப்பம் என எந்த சிற்றுண்டிக்கும்  நல்ல இணை. காய்கறிகள் கிடைக்காத நேரம் இந்த குருமா பயன்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT