முகப்பு
மகளிர்மணி

 மகுடம் சூடிய  மெக்சிகோ அழகி!

மிஸ் யுனிவர்ஸ் 2020 அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியே மெஸா மகுடம் சூடினார். இந்திய அழகி அட்லைன் கேஸ்ட்லினோ நான்காம் இடம் பெற்றார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:


மிஸ் யுனிவர்ஸ் 2020 அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியே மெஸா மகுடம் சூடினார். இந்திய அழகி அட்லைன் கேஸ்ட்லினோ நான்காம் இடம் பெற்றார்.

69-ஆவது மிஸ் யுனிவர்ஸ் 2020 அழகிப்போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இப்போட்டியில் 74 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற 22 வயதான அட்லைன் கேஸ்டலினோ இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியே மெஸா மிஸ்யுனிவர்ஸ் 2020 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019 -ஆம் ஆண்டில் மிஸ்யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் கறுப்பின அழகியான தென் ஆப்பரிக்காவின் ஜோஜிபினி மகுடம் சூட்டினார்.

முதல் ரன்னர் அப் ஆக பிரேசில் அழகி ஜுலியா காமாவும், இரண்டாவது ரன்னர் அப் ஆக பெரு அழகி ஜனிக்மசோடாவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அழகி அட்லைன் மூன்றாவது ரன்னர் அப் அதாவது நான்காவது இடத்தைப் பிடித்தார். குவைத்தில் பிறந்தவரான அட்லைனின் பூர்வீகம் கர்நாடகா மாநிலம் உடுப்பி ஆகும். இவர் பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துள்ளார். பட்டம் வென்ற அட்லைனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

கவனம் ஈர்த்த மியான்மர் அழகி: இறுதிச் சுற்றில் பங்கேற்ற மியான்மர் அழகி துஷார் வின்ட்லிவின், தனது நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக மியான்மருக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்ற பதாகையுடன் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளது. இதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் சுமார் 800 பேர் பலியாகி உள்ளனர். 4000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில தகவல்கள்: மகுடம் சூடிய ஆண்ட்ரியே கூறுகையில், ""அழகு என்பது முகத்தில் அல்ல. இதயத்தில் இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே சமூகமாகவும் ஒரே மாதிரியாக முன்னேறுவோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments