சீஸ் தக்காளி தோசை
நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைக் கடலை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிளகாய் தூள் , உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும்.
தேவையானவை:
சீஸ்- அரை கிண்ணம்
தக்காளி-1
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-6
கடலை மாவு -2 கிண்ணம்
மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
Advertisement
நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைக் கடலை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிளகாய் தூள் , உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும். தோசைக் கல்லில் இரண்டு தேக் கரண்டி எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை தோசை போல் ஊற்றவும். மாவின் மேல் சிறிது எண்ணெய் விடவும். வெந்தபின் திருப்பி விட்டு எடுக்கவும். இறக்குமுன் துருவிய வெண்ணெய் தூவவும். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.