முகப்பு
மகளிர்மணி

 முட்டைகோஸ் உருளைக் கிழங்கு  சப்ஜி 

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், கஸ்தூரி மேத்தி தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

Updated On : 31 மார்ச், 2021 at 4:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:23 AM


தேவையானவை

முட்டைகோஸ் ( சிறியது) - 1
உருளைக்கிழங்கு - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் மூடி - கால் மூடி
சீரகம் - 1 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 3 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

Advertisement

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், கஸ்தூரி மேத்தி தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் உருளைக்கிழங்கு சேர்த்து வதங்கியவுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். மசாலா நன்கு வதங்கியவுடன் முட்டைக் கோஸ் சேர்க்கவும். இக்கலவையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும். இட்லி தோசைக்கு சுவையான சைடிஷ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.