முகப்பு
மகளிர்மணி

காலிஃபிளவர்  சப்ஜி 

காலிஃபிளவரை ஆய்ந்து சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெதுவெதுப்பான நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டிக் கொள்ளவும்.

Updated On : 31 மார்ச், 2021 at 4:54 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:23 AM


தேவையானவை:

காலிஃபிளவர் - 250 கிராம்
பச்சை பட்டாணி - அரை கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
சோம்பு, கடுகு ( தாளிக்க ) - அரை தேக்கரண்டி

செய்முறை:

Advertisement

காலிஃபிளவரை ஆய்ந்து சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெதுவெதுப்பான நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சோம்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் . தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு காலிஃபிளவர், பட்டாணி, உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனைப் போன பிறகு நன்கு கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். சப்பாத்தி தோசைக்கு ஏற்ற சப்ஜி இது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.