முகப்பு
மகளிர்மணி

பொன்னாங்கண்ணிக் கீரை சூப்

பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்வதற்கு, முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவிய பிறகு இஞ்சியின் மேல் தோலினை சீவி துருவி எடுத்துக்கொள்ளவும்.

Updated On : 27 மே, 2021 at 4:57 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:48 AM


தேவையானவை:

பொன்னாங்கண்ணிக் கீரை - 1 கிண்ணம்
தனியா - 1 தேக்கரண்டி
இஞ்சி -1 துண்டு
மிளகு -  அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

Advertisement

பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்வதற்கு, முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவிய பிறகு இஞ்சியின் மேல் தோலினை சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு மிளகை ஒன்று இரண்டாக உடைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக பொன்னாங்கண்ணி கீரையை சிறியதாக நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். இப்போது சூப் தயார் செய்வதற்கு வாணலியில் 1 டம்ளர்  தண்ணீர் ஊற்றி அதனுடன் துருவி வைத்துள்ள இஞ்சி, உடைத்து வைத்துள்ள மிளகு, தனியா, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போதே நறுக்கி வைத்துள்ள கீரையினை சேர்த்து  2 நிமிடம் மூடி வைக்கவும். இப்போது அந்த கீரையின் சாறானது கொதிநீரில் இறங்கிவிடும். ஈஸியான பொன்னாங்கண்ணி சூப் தயாராகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.