முகப்பு
மகளிர்மணி

பிரெட் சில்லி 

பிரெட்டை துண்டுகளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர்.  ஒரு தோசைக்கல்லை காய வைத்து அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர்,

Updated On : 24 நவம்பர், 2021 at 3:13 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:01 AM

தேவையானவை:

பிரட் - 4  துண்டுகள்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய்- பாதியளவு
டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:  

Advertisement

பிரெட்டை துண்டுகளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர்.  ஒரு தோசைக்கல்லை காய வைத்து அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர்,  பொரித்த பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி  எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலா மிளகுத்தூள் சேர்த்து பிரெட் துண்டுகளைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி டொமேட்டோ கெட்சப் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கவும். சுவையான பிரெட் சில்லி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.