முகப்பு
மகளிர்மணி

பச்சைப்பயறு பனீர் சுண்டல் 

முளைகட்டிய பயறை ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

தேவையானவை: 

முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம்
பனீர் துருவல் - முக்கால் கிண்ணம்
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள்- ஒரு  தேத்கரண்டி
மிளகாய் - 2
சீரகம் - கால்  தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: 

முளைகட்டிய பயறை ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.