கோதுமை சுண்டல்
முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
தேவையானவை:
முளைகட்டிய கோதுமை - ஒரு கிண்ணம்
கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்)
வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.