முகப்பு
மகளிர்மணி

பதிமூன்று வயதில் சாதனை!

இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக 18 ஆண்டுகள் இருந்தவர் அனிதா பால்துரை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக 18 ஆண்டுகள் இருந்தவர் அனிதா பால்துரை.

தமிழக அரசின் "வாழ்நாள் சாதனையாளர்' விருது, மத்திய அரசின் "பத்மஸ்ரீ விருது' உள்ளிட்ட விருதுகள் பெற்றிருக்கிறார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் 30-க்கும் மேற்பட்ட பத்தகங்களும், சர்வதேச அளவில் 4 தங்கப் பதக்கங்களும், 2 வெள்ளி பதக்கங்களும் பெற்றவர்.

அனிதா பால்துரையின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் யாக்கோப்புரம் என்ற கிராமம். அப்பா பால்துரை, தமிழ்நாடு காவல்துறை தலைமைக் காவலராக பணியாற்றியவர்.

""பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரும் கூடைப்பந்து பயிற்சியாளருமான சம்பத், என்னுடைய உடல்வாகிற்கு கூடைப்பந்து விளையாடலாம் என்று ஆலோசனை தெரிவித்ததுடன் பயிற்சியும் அளித்தார். ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை நானும் என்னுடைய சக மாணவிகளும் தொடர்ந்து பயிற்சி பெற்றோம். பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஆடத் துவங்கி 13 வயதில் மினி நேஷனல்ஸ் டீமில் இடம் பெற்று விளையாடினேன்.

விளையாட்டு வீராங்கனைகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் 2003-ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலை கிடைத்தது. தென்னிந்திய ரயில்வே தலைமை அலுவலகத்தில் நல்வாழ்வு அதிகாரியாகப் பணியாற்றுவதுடன், தென்னிந்திய ரயில்வே மற்றும் இந்திய ரயில்வே அணிகளுக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் அனிதா பால்துரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.