மகளிர்மணி

மோதகம் 

மேலே சொன்னது  போன்று  கடலைப்பருப்பு பூரணம் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

ஏ.சந்துரு

தேவையானவை: 

அரிசி மாவு - 4 கிண்ணம்
கடலைப் பருப்பு - 2  கிண்ணம்
வெல்லம் - அரைக் கிலோ
தேங்காய்த்துருவல் -  2 கிண்ணம்
உப்பு  -  ஒரு தேக்கரண்டி

செய்முறை: 

மேலே சொன்னது  போன்று  கடலைப்பருப்பு பூரணம் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர்  அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் விட்டு, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவினை போட்டு, தேவையான அளவு சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு மாவை அழுத்திக் கிளறிவிட வேண்டும். பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் அளவாக ஊற்றி, கைகளால் மாவை மிருதுவாக பிசைந்து கொள்ளவும். 

அதன்பின் சிறிது  மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கைகளால் அழுத்தி அதனைக் கிண்ணம் போல் செய்ய வேண்டும். அதனுள்ளே சிறிது பூரணத்தை வைக்க வேண்டும்.

பின்னர் அதன் ஓரங்களை, விரும்பிய வடிவில் அழகாக ஒரே அளவாக மூட வேண்டும். பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேகவிட வேண்டும். 15 நிமிடம் கழித்து கொழுக்கட்டை வெந்தவுடன் எடுத்து விடவும் சுவையான இனிப்பு மோதகம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளியிலே தெரிவது... ஆலியா பட்!

அக்டோபர் மாதப் பலன்கள் - கடகம்

ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி!

அக்டோபர் மாதப் பலன்கள் - மிதுனம்

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மணிப்பூர் வீராங்கனை!

SCROLL FOR NEXT