மகளிர்மணி

கடலைப்பருப்பு வெல்ல பூரணம் 

கடலைப்பருப்பை  குக்கரிலிட்டு  2 விசில் வரை மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

ஏ.சந்துரு

தேவையானவை:

கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய் பொடி - சிறிது 
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி

செய்முறை: 

கடலைப்பருப்பை  குக்கரிலிட்டு  2 விசில் வரை மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த பருப்பை வடிக்கட்டி மிக்ஸியில்  அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில்  கொதிக்க வைத்து வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி அதனுடன் அரைத்த பருப்பைச் சேர்த்து கிளறவும்.  அதனுடன் தேங்காய்த் துருவலையும், ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்து  நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி விடவும். இப்போது பருப்பை உருண்டையாக பிடித்து கொழுக்கட்டை மாவில் வைத்தால்  கடலைப்பருப்பு இனிப்பு பூரணம் ரெடி.

கொழுக்கட்டைக்கு மேல் மாவு தயாரித்துக் கொண்டு  தேங்காய் எள் பூரணமோ அல்லது  கடலைப்பருப்பு வெல்ல பூரணமோ  ஏதாவது ஒரு பூரணத்தை கொழுக்கட்டை மாவினில் வைத்து மடித்துக் கொண்டு  இட்லி பானையில் வைத்து  வேகவிட்டு  எடுக்கவும். பூரண கொழுக்கட்டை தயார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT