முகப்பு
மகளிர்மணி

பச்சைப் பயறு சான்ட்விச்

பச்சைப் பயிறை எட்டு மணி நேரம் ஊற வைத்து வடித்து ஈரத்துணியால் கட்டி எட்டு மணி நேரம் மீண்டும் வைக்கவும். பிறகு கொதிக்கும் தண்ணீரில் இந்த முளைக்கட்டிய பச்சை பயறைப் போட்டு நீரை வடிக்கவும்.

Updated On : 17 செப்டம்பர், 2021 at 12:37 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:39 AM

தேவையான பொருள்கள்:

பிரெட் துண்டுகள் - 8
பச்சைப் பயறு - அரை கிண்ணம்
கேரட் ( துருவியது) - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் ( நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் ( நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
வெள்ளரிக்காய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

Advertisement

பச்சைப் பயிறை எட்டு மணி நேரம் ஊற வைத்து வடித்து ஈரத்துணியால் கட்டி எட்டு மணி நேரம் மீண்டும் வைக்கவும். பிறகு கொதிக்கும் தண்ணீரில் இந்த முளைக்கட்டிய பச்சை பயறைப் போட்டு நீரை வடிக்கவும். பிரெட்டின் ஓரங்களை நறுக்கி வைக்கவும். பச்சை பயரையும் மற்ற பொருள்களையும் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். ஒரு பிரெட் துண்டில் இந்தக் கலவையை வைத்து மற்றொரு துண்டால் மூடவும். மற்ற பிரெட் துண்டுகளிலும் இதேமாதிரி செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.