மகளிர்மணி

நார்வே: முதல் தமிழ்  எம்.பி!

"ஆண்களைவிட  அதிக அதிகாரத்தை பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.

பொ. ஜெயசந்திரன்

"ஆண்களைவிட  அதிக அதிகாரத்தை பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் ஆண், பெண் இருவருமே அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்' மகளிருக்கு உரிமைகளை வழங்க வேண்டியதை நியாயப்படுத்தும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த மகளிர் உரிமை போராளியும் தத்துவ ஞானியுமான மேரி வோல்ஸ்டோஸ்கிராப்ட் கூறிய வார்த்தைகள் தான் இவை. பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் இந்த வார்த்தைகள் சில இடங்களில் பொருந்துவதாக இருந்தாலும் பல இடங்களில் பெண்கள்; தங்களுடைய திறமையை வெளியில் கொண்டு வந்து ஆண்களைத் தாண்டி வெற்றிப் பாதையை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கம்சாயினி குணரெத்தினம் நார்வே நாட்டில் தற்போது எம்.பி ஆகியுள்ளார். 

இலங்கை யாழ்ப்பாணத்தில் 1988-ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னுடைய மூன்று வயதில் நார்வேக்குப் புலம் பெயர்ந்தவர். இந்நாட்டின் வடக்கே நிறைய மீன் பிடி கிராமங்கள் இருக்கின்றன அங்கு தான் முதலில் இக்குடும்பம் வாழ்ந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக  நார்வியம் மொழியில் கல்வி பயின்றார். ஆனாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் வகுப்பிற்குக் கண்டிப்பாக போக வேண்டும் என்று தன்னுடைய தந்தையின் கட்டளைப்படி தமிழை முழுவதுமாக கற்றுக் கொண்டார். 

நார்வே ஒரு மன்னராட்சி நாடாக இருந்தாலும் மன்னருக்கு கையெழுத்திடும் அதிகாரத்தைத் தவிர வேறொன்றும் கிடையாது. அதன் காரணமாக மன்னர் மக்கள் பிரதிநிதிகள் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானங்கள் எதையும் மறுக்காமல் கையெழுத்து போடுவது மரபு. 

இந்நாட்டில் பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது  1901-ஆம் ஆண்டு உள்ளாட்சி சபைகளில் வாக்கிடும் உரிமையைப் பெற்றனர்.

1907-இல் வரி செலுத்தும் பெண்கள் வரி செலுத்தும் ஆண்களை திருமணம் புரிந்தவராக இருந்தால் அவருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது.

நார்வே நாடாளுமன்றத்தின் முதலாவது பெண் பிரதிநிதியாக அன்னா ரோக்ஸ்தாட் 1911-இல் தேர்வானார். ஆனால் அவர் வாக்களிப்பின் மூலம் தேர்வாகவில்லை. பிராட்லி என்பவரின் இடம் காலியானதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நார்வேயில் 1915-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்தான் அனைத்து பெண்களும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். ஆனால் அந்தத் தேர்தலில் எந்தப் பெண்ணும் வெற்றி பெறவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காரின் பிளடாவு என்ற பெண்மணி வெற்றி பெற்று முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். இப்படிப்பட்ட நாட்டின் அரசியலுக்குள் நுழைந்தவர் தான் கமசாயினி.

2011-இல் நார்வேயின் உத்தாயா தீவில் தொழிற்கட்சி இளைஞர் அணியின் விடுமுறைக்கால முகாமில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலையில் சுமார் 69பேர் கூட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அந்த இளைஞர் அணியில் இணைந்திருந்த இவர் கொலையாளியின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி ஆஸ்லோவின் துணை மேயராக மாநகர சபையால் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 2019-ஆம் ஆண்டு அதே சபைக்கு தேர்தெடுக்கப்பட்டார்.
169பேரைத் தேர்வு  செய்கின்ற பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. நார்வேயில் 3.2 லடசம் வாக்காளர்கள்  வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள். இவர்களில் 11பேர் தேர்வாகியுள்ளனர். அதில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது பிரதமராகப் போகும் யூனாஸ் என்ற நபருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ளது கம்சாயினியின் வெற்றி எனலாம். இதனால் முக்கியப் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT