முகப்பு
மகளிர்மணி

தேங்காய்ப் பூ இடியாப்பம்

அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

Updated On : 3 மே, 2022 at 10:35 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:38 PM

தேவையானவை:

இட்லி அரிசி- கால் கிலோ
தேங்காய்த் துருவல்- ஒரு கிலோ
காய்ந்த மிளகாய்- 1
ஊறவைத்த உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்- 4 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை,  பெருங்காயத் தூள், கறிவேப்பிலை  - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

Advertisement

அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். இதை இட்லித் தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து, சூடு இருக்கும்போதே மெல்லிய வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து இடியாப்பத்துடன் சேர்க்கவும். பின்னர், இதனுடன் ஊறவைத்த உளுத்தம்பருப்பு , தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வறுத்த வேர்க்கடலை, தேவையான உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.