தேவையானவை:
பதப்படுத்திய அரிசி மாவு- 1 கிண்ணம்
வறுத்த உளுத்த மாவு- 2 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
வெண்ணெய்- 2 மேஜை கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி அரிசி மாவை லேசாக வறுத்து மற்ற எல்லாப் பொருள்களையும் கலந்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைய வேண்டும். நான்கைந்து சிறிய தட்டுகளில் எண்ணெய் தடவி கை விரல்களிலும் எண்ணெய் தடவிக் கொண்டு, சிறிது மாவை எடுத்து நீளவாக்கில் கயிறு போல திரித்துக் கொண்டே வட்ட வடிவமான தட்டுகளில் இரண்டு சுற்று சுற்றிவிட வேண்டும்.
வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.