மகளிர்மணி

சார்வாரி  புலாவ் - (காஷ்மீர்) 

DIN

தேவையானவை:

பாசுமதி அரிசி ஒரு கிண்ணம்
பால் 2 கிண்ணம்
கறுப்பு கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து (இரண்டும் சேர்ந்து) கால் கிண்ணம்
நெய் கால் கிண்ணம்
ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய்
தலா 2
சீரகம் 2 தேக்கரண்டி
குங்குமப்பூ சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

கறுப்பு உளுந்து, கறுப்பு கொண்டைக்கடலையை 3 மணி நேரம் ஊறவைத்து, வேக வைக்கவும். பாசுமதி அரிசியுடன் பால் சேர்த்து உதிர் உதிரான சாதமாக வடித்து, தட்டில் ஆறவைக்கவும். வாணலியில் நெய்விட்டு, சீரகம் சேர்த்து பொரிக்கவும். ஏலக்காய், கிராம்பு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து புரட்டவும். வேக வைத்த கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, வேக வைத்த பாசுமதி அரிசி சேர்த்து நன்கு கலந்து விடவும். பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி குங்குமப்பூவால் அலங்கரித்துப் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT