மகளிர்மணி

சோளம் கட்லெட் 

சோளத்தை தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு. அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

எம்.ராஜதிலகா

தேவையானவை:

சோளம் - 1 கிண்ணம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1 
பூண்டு - 2பல்
பச்சை மிளகாய் - 1
சிறிய தக்காளி - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1  தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் -  அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: 

சோளத்தை தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு. அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியை    அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து இதனுடன் சேர்க்கவும். கரம் மசாலா, கடலை மாவு மற்றும் சோளத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்து வரும் வரை வதக்கவும், பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். பிறகு இந்த கலவையை சின்ன சின்ன கட்லெட்களாக உருட்டி வைக்கவும். இதை தவாவில் போட்டு வேக வைத்து எடுக்கலாம் அல்லது  பிரெட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் பொரித்தும் எடுக்கலாம். 

சாஸூடன் உண்ணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

SCROLL FOR NEXT