மகளிர்மணி

சோளம் சூப் 

எம்.ராஜதிலகா

தேவையானவை:

இளம் சோளம் -  1 கிண்ணம்
நாட்டுத் தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
சோம்பு- அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 2
துவரம் பருப்பு வேக வைத்த நீர் -  1 கிண்ணம்
மஞ்சள் தூள், மிளகுத்தூள் - தலா கால் 
 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் (அ) நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  

இளம் கதிராக உள்ள உதிர்த்த சோளத்தை வேக வைத்து சற்று நீர் விட்டு மிக்ஸியில் அடித்து பால் எடுத்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் (அ) நெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு மற்றும் ஏலம் போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சோளப் பாலையும் சேர்க்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீரும் சேர்த்து நன்கு கொதித்த பின் இறக்கி மல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து சுடச் சுடப் பருகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT