மகளிர்மணி

தினமும் முருங்கை...

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப் பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

சுந்தரி காந்தி

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப் பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். 

தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.   

அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.   
கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.

கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.  

இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்  பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கும்.

தேங்காய் அதிகம் இருந்தால் பொடியாக நறுக்கி ஒரு பாக்கெட்டில் போட்டு குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்து கொள்ளலாம். தேவையான போது சட்னிக்கு, குழம்புக்கு கொஞ்சம் எடுத்து சிறிது பயன்படுத்தலாம்.

இஞ்சி டீ அருந்துபவர்கள் இஞ்சியை  தட்டி போட்டு கொண்டு இருக்காமல்,  ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

முருங்கைக்காய் அதிகமாக இருந்தால், விரல்அளவுக்கு நறுக்கி ஒரு கவரில் போட்டு குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். பிறகு சமைக்கும் போது, அதனை எடுத்து கழுவி சேர்த்துக் கொள்ளலாம்.

குழம்புகளில் தேங்காயின் அளவை குறைத்துக் கொண்டு பாதாமைச் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இது கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

SCROLL FOR NEXT