மகளிர்மணி

ஜவ்வரிசி பொங்கல்

ஜவ்வரிசியை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வறுத்துக் கொண்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மலர வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

ஜவ்வரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 200 கிராம்
நெய் - 4 தேக்கரண்டி
முந்திரி - 8
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - 50 கிராம்

செய்முறை:

ஜவ்வரிசியை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வறுத்துக் கொண்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மலர வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். வடித்த தண்ணீரில் உடைத்த ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி வெந்ததும் அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் வெல்லத்தை கரைத்து சேர்க்கவும். இந்த கலவை ஒன்றோடு ஒன்று நன்கு கலந்ததும். வாணலியில் நெய்யை காய வைத்து பொடியாக நறுக்கிய முந்திரி, ஏலக்காய்த்தூள், கிஸ்மிஸ் பழம் சேர்த்து தாளித்து கொட்டி ஐந்து நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT