மகளிர்மணி

கேழ்வரகு- பாலக் அடை 

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பாலக்கீரை- 1 கட்டு
கேழ்வரகு மாவு- 100 கிராம்
தோசை மாவு- 50 கிராம்
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
முட்டை கோஸ்- 1 சிறியது
கேரட்- 50 கிராம்
கறி வேப்பிலை- 1 பிடி
உப்பு,எண்ணெய்- தேவையானவை

செய்முறை: 

முட்டைக் கோஸ், கேரட்  இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலக் கீரையை நன்றாக வேக வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேழ்வரகு மாவு, தோசை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைத் தாளிக்க வேண்டும். பின்னர், நறுக்கிய முட்டைகோஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதைக்க வேண்டும்.

அடைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவி மாவை விட்டு பரப்பி அதன் மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து கறுகாமல் வெந்தெடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT