"ரோஜாப் பூ குல்கந்து' பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ரோஜாப் பூ குல்கந்து இனிப்பாக, நல்ல வாசனையுடன் கூடியதாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை குல்கந்தை விரும்பிப் சாப்பிடுவார்கள்.
இந்த ரோஜாப்பூ குல்கந்து தயாரிப்பதற்கு முதலில் தேவைப்படுவது ரோஜாப்பூவின் இதழ்களேயாகும். எனவே நன்றாக மலர்ந்த, அழகிய பெரும் இதழ்களையுடைய பன்னீர் ரோஜா பூக்களாகப் பார்த்து தேவையான அளவு வாங்கிவர வேண்டும்.
வாங்கி வந்த பூக்களை அதிலுள்ள இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து தேனில் ஊறவைத்து எடுத்தால் குல்கந்து ரெடி.
ரோஜாப்பூ குல்கந்தைத் தினசரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி விடும். தேகத்தில் புதிய தெம்பு உண்டாகும். சுறுசுறுப்பு உண்டாகும். ரத்தம் சுத்தமாகும். உடல் நலம் பெறும். மனதில் ஒரு புதுவகையான சந்தோஷம் உண்டாகும்.
கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதம் முதல் இந்த ரோஜாப் பூ குல்கந்தைச் சாப்பிட்டு வந்தால் குழந்தையும் ரோஜாப்பூ நிறத்தில் அழகிய அங்க அவயங்களுடன் பிறக்கும். அந்தக் குழந்தையின் உடலில் ஓடும் இரத்தமும் சுத்திகரிக்கப் பட்டதாகவே இருக்கும். ரோஜா குல்கந்தை தினமும் சாப்பிட்டு வர, இதயம் வலுப்பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.