மகளிர்மணி

தக்காளி காய் குருமா

சுந்தரி காந்தி

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 2
தக்காளி காய் - 10
கடுகு - கால் தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 1
லவங்கம் - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 8 பற்கள் 
இஞ்சி - சிறு துண்டு 
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லித்தழை  சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை: 

தக்காளி காய்  குருமா செய்வதற்கு முதலில் இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸியில் தேங்காய்த்துருவல், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும். 

அடுத்து வெங்காயம், தக்காளி காய்   ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, பட்டை, கிராம்பு, லவங்கம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளி காய்  போட்டு வதக்கவும். தக்காளி காய் நன்கு வதங்கியதும், அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வதக்கி,  பின்  அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக விடவும். தக்காளி காய் குருமா நன்கு சுண்டி வரும்போது கொத்துமல்லித் தழைகளை தூவி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT