மகளிர்மணி

தக்காளி காய் பச்சடி

சுந்தரி காந்தி

தேவையானவை

தக்காளி காய் - 8
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கடுகு -  கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:   

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பின்பு மத்தைக் கொண்டு நன்கு மசித்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்  பொடியாக நறுக்கிய  வெங்காயம், உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.  இதனுடன் மசித்து வைத்துள்ள தக்காளிக்காய் கரைசல் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.  அதனுடன் கொத்துமல்லி இலையைச் சேர்த்துப் பரிமாறவும். ருசியான, சத்தான தக்காளி காய் பச்சடி தயார்.  இது இட்லி , தோசைக்கு சரியான ஜோடி. குறிப்பு: கூடுதல் சுவைக்கு வேக வைத்த சிறுபருப்பு சேர்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT