மகளிர்மணி

முருங்கை பரோட்டா

முருங்கை கீரையில் உள்ள குச்சிகளை நீக்கி, இலைகளை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முருங்கை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையானப் பொருட்கள்:

முருங்கைக்கீரை - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1  கிண்ணம்
மிளகு - 1/2  தேக்கரண்டி
தனியா - 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1/4  தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் -1/4  தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய் பொடி-1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை: 

முருங்கை கீரையில் உள்ள குச்சிகளை நீக்கி, இலைகளை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முருங்கை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். மிளகு, தனியா, ஓமம்  சீரகம் ஆகியவற்றை மிக்சியில் இட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த கலவையை சேர்த்து கிளறி,  வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் , மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, முருங்கைக்கீரை, உலர்ந்த மாங்காய் பொடி , உப்பு சேர்த்து நன்றாக வெந்தவுடன் இறக்கிவிடவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவை  உருண்டைகளாக உருட்டி,  சிறிது தடிமனாக தேய்த்து, நடுவில் சிறிது முருங்கை இலை கலவையை வைக்க வேண்டும். மீண்டும் அதை உருண்டையாக பக்குவமாக உருட்டி, சப்பாத்திக் கட்டையால் மிருதுவாக இட்டு, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை இருபக்கமும் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்தால் முருங்கை பரோட்டா ரெடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT